Mu Vimala கலை உலகு

மேக்-கப் விமலா (ஒப்பனை)

Saturday, December 31, 2011

வணக்கம்

எனக்கு கலை தந்த
அன்னை வாணிக்கும்
என்னை கலைக் களித்த
அன்னை விமலாவுக்கும்
எனக்கு முகம் கொடுத்த
அனைத்து முகங்களுக்கும்
நன்றி! நன்றி! நன்றி!

- தயா லோகதாசன்-

Friday, December 30, 2011

Die blüte Der Jugend - DVD


Swiss BE

20.12.2009

17.00 Uhr


- Thaya Logathasan-

Thursday, December 29, 2011

"0° - sehr heiss" இருமொழி நாடகம்






அல்ப்ஸ் அரங்காடிகள் வழங்கும் "0° -sehr heiss" (சீரோ டிக்கிரி சேர் கைஸ்) அரங்காற்றுகை, மார்ச் 2008 முதல் சுவிற்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் பல இடங்களில் மேடையேறுகிறது. ஜேர்மன் - தமிழ் ஆகிய மொழிகளின் இணைப்பில் உருவான இருமொழி நாடகத்தில் சுவிஸ் வாழ் தமிழர்களின் கொதிநிலை வாழ்வியல் வெளிப்படுத்தப்படுகிறது.



நன்றி: தயாரிப்பாளர் ஏ.ஜி.யோகராஜா, நெறியாளர் ஊர்ஸ் அந்தர்கிறாவ், இணைநெறியாளர்கள் வாவி. பாஸ்கர் + ச. இரமணதாஸ்



-தயா லோகதாசன்-

Wednesday, December 28, 2011

"பூப்பெய்தும் காலம்" - திரை ஓவியம்










சுவிற்சர்லாந்து தமிழ் சினி சேர்க்கிள் (TCC) வழங்கும் " பூப்பெய்தும் காலம்" (Die Blüte der Jugend) நீள் திரை ஓவியத்தின் திரைவெள்ளோட்டம் 05 ஏப்பிரல் 2008 அன்று பேர்ண் Kino ABC திரையரங்கில் இடம்பெற்றது. இதில் புலம்பெயர் சூழலில் வாழும் விடலை செல்வங்களின் கலைவிருத்தி பூப்பெய்துகிறது.


நன்றி : தயாரிப்பாளர் ஏ.ஜி.யோகராஜா, கிரியேட்டிவ் கெட் கா.ஞானதாஸ், இயக்குனர் ச.இரமணதாஸ்



- தயா லோகதாசன்-

Tuesday, December 27, 2011

மீனாட்சி திருக்கல்யாணம்





சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற - டென்மார்க் சிறீ அபிராமி உபாசகி அம்மையாரின் ஜெயந்தி விழா 2007 - நிகழ்வுகளின்போது "மீனாட்சி திருக்கல்யாணம்" இறையுணர்வு நாடகம் மேடையேறியது.


நன்றி: நெறியாளர் கே.எம்.ரி.பாலகுமார் (சுவிஸ்)


- தயா லோகதாசன்-

Monday, December 26, 2011

பக்தப் பிரகலாதன்






சுவிஸ் சூக் மாநிலக் கலைஞர்கள் தயாரித்து வழங்கிய "பக்தப் பிரகலாதன்" மேடைநாடகம், 03.02.2007 அன்று சிறீ சித்தி விநாயகர் ஆலயம் நாடத்திய பொங்கல் விழாவில் இடம்பெற்றது.

நன்றி: நாடக இயக்குனர் திரு.விமல் (சுவி்ஸ்)

-தயா லோகதாசன் -

Sunday, December 25, 2011

0° scher heiss





ஏ.ஜி.யோகராஜாவின் "சீரோ டிகிறி சேர் கைஸ்" சமூக நாடகம் டிசம்பர் 2006 இல் சுவிசில் இரு இடங்களில் மேடையேறியது. சுவிசில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சிந்திக்க தூண்டிய இந்த நாடகத்தினை ச.இரமணதாஸ் நெறியாள்கை செய்திருந்தார்.

நன்றி: நெறியாளர் ச. இரமணதாஸ்

- தயா லோகதாசன்-

Saturday, December 24, 2011

டென்மார்க்கில் மீண்டும் "காத்தவராயன்" கூத்து






டென்மார்க் சிறீ அபிராமி அம்மன் ஆலயத்தில், 06.08.2006 அன்று நடைபெற்ற இரதோற்சவத்தில் "காத்தவராயன்" சிந்து நடைக்கூத்து மேடையெறியது. 4வது தடவையாக மேடையேறிய இக்கூத்தில் சுவிஸ், டென்மார்க், ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கலந்துகொண்ட கலைஞர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: நெறியாளர் கே .எம்.ரி. பாலகுமார் (சுவிஸ்)

- தயா லோகதாசன்-

Friday, December 23, 2011

"வகுப்பு" குறும்பட அறிமுகம்




சுவிஸில் உருவாக்கப்பட்ட "வகுப்பு" குறும்படத்தின் அறிமுக விழாவும் பிரத்தியேக காட்சியும் 20.05.2006 அன்று பேர்ண் மாநகரில் இடம்பெற்றது.

-தயா லோகதாசன்-

"வகுப்பு" குறும்படம்








சுவிஸ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட "வகுப்பு" குறும்படத்தின் சில பதிவு..

நன்றி: இயக்குனர் கே.எம்.ரி. பாலகுமார்

-தயா லோகதாசன்-

Thursday, December 22, 2011

ஜேர்மனியில் "காத்தவராயன்" கூத்து




ஜேர்மன் டோட்முண்ட் மாநகரில் 22.04.2006 அன்று நடைபெற்ற அருள் ஒளி தர்ஷன மாலை நிகழ்வில் "காத்தவராயன்" சிந்து நடைக்கூத்து அரங்கேறியது. ஜேர்மன் வாழ் - டென்மார்க் சிறீ அபிராமி அம்மன் ஆலய பக்தர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் - டென்மார்க், சுவிஸ், ஜேர்மன் கலைஞர்கள் இணைந்து 3வது தடவையாக இக் கூத்தை மேடையேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நெறியாளர் கே.எம்.ரி. பாலகுமார் (சுவிஸ்)

- தயா லோகதாசன் -

Wednesday, December 21, 2011

அபிராமி





சுவிஸ் - பேர்ண் சைவநெறிக் கூடம் 25.03.2006 அன்று நடாத்திய "சைவமும் தமிழும்" நிகழ்வில் "அபிராமி" நாடகம் மேடையேற்றப்பட்டது.

நன்றி- இயக்குனர் கே.எம்.ரி.பாலகுமார்

- தயா லோகதாசன்-

சுவிற்சர்லாந்தில் "காத்தவராயன்" கூத்து




சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநகரில் 04.02.2006 அன்று "காத்தவராயன் கூத்து" மேடையேறியது. டென்மார்க் சிறீ அபிராமி அம்மன் உபாசகி அவர்களின் ஜெயந்தி விழாவில் சிறப்பு நிகழ்வாக இது இடம்பெற்றது. இதில் டென்மார்க், ஜேர்மன் மற்றும் சுவிஸ் கலைஞர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: நெறியாளர் கே.எம்.ரி. பாலகுமார் (சுவிஸ்)

-தயா லோகதாசன்-

Tuesday, December 20, 2011

லண்டனில் "நாடக விழா 2003"






27.09.2003 அன்று, லண்டனில் "நாடக விழா 2003" சிறப்பாக நடைபெற்றறது. ஐரோப்பிய கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்காற்றுக் குழு வழங்கிய இந் நாடக நிகழ்வில் "மயான காண்டம் 2" ,"ஆடுகளம்" , "அம்மையே அப்பா ஒப்பிலாமணியே..", " விலங்கோடிருத்தல்" , "நானொரு கரப்பான் பூச்சி" , "Made in Sri Lanka" ஆகிய நாடகங்கள் மேடையேறின.

நன்றி: நெறியாளர் அன்ரன் பொன்ராசா (சுவிஸ்), ஆசீர்வாதம் சார்ல்ஸ் ( லண்டன்)

- தயா லோகதாசன் -

எரிமலைப் பூக்கள்


2002 ம் ஆண்டு லண்டன் அரினா மண்டபத்தில் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வில், ஏ.ஜி.யோகராஜாவின் "எரிமலைப் பூக்கள்" அரங்க நிகழ்வு இடம்பெற்றது. இதனை லண்டன் அரங்காற்றுக் குழுவினர் அளிக்கை செய்தனர்.

நன்றி: அன்ரன் பொன்ராசா (சுவிஸ்), ஆசீர்வாதம் சார்ல்ஸ் (லண்டன்) , ச.இரமணதாஸ் (சுவிஸ்)

- தயா லோகதாசன் -

ஒப்பனைக் கலை - (பகிர்வு 01)



அழகு..
வாழ்வில் இன்றியமையாத ஒன்று.
கண்ணுக்கு தென்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அழகு.
பார்க்கும் பார்வையை பொறுத்து அதன் படிநிலைகள் அமைக்கப்படுகிறது.

கலைகள் மிக அழகு. - அதற்குள்
ஒப்பனையும் ஓர் அழகு!

ஒப்பனைக் கலை மிகவும் நுண்ணியமானது. இதன் ஒவ்வொரு அசைவும் அவதானமானது. அனுபவங்களின் அடிப்படையில் தான் இதன் கலை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
ஒப்பனைக் களம்
ஒருவருக்குரிய ஒப்பனையை தீர்மானிப்பதில் முக்கிய இடம்பெறுவது அந்தந்த ஒப்பனைக்குரிய களங்களே.
மேடை நாடகங்களுக்குரிய ஒப்பனைகள்
இறுதி இருக்கையில் அமர்ந்திருக்கும் ரசிகனுக்கும் பாத்திர வெளிப்பாடுகளை தெளிவாக காட்டக் கூடியனவாகவே அதிகளவில் அமைந்திருக்கும். இதில் ஒளியமைப்பின் செறிவுக்கேற்பவே ஒப்பனை அமையும்.
திரைப்படங்களுக்குரிய ஒப்பனைகள் பாத்திரத்திற்கேற்ப மாறுபடும். கமரா கண்களுக்கு, மாறுபடும் ஒளியின் செறிவு நிலைகளுக்கிடையில் ஓரே பாத்திரத்தினை வெளிக்காட்டுவதற்காக:- ஒவ்வொரு கணமும் அவ் ஒப்பனையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கும்.
இவ்வாறு நடனங்களுக்கான ஒப்பனைகள், புகைப்படத்துக்குரிய ஒப்பனைகள், வீடியோ கமிராவிற்குரிய ஒப்பனைகள், சாதாரண நிகழ்வுகளுக்குரிய ஒப்பனைகள் என களங்களுக்கு ஏற்ப ஒருவருக்குரிய ஒப்பனைகள் மாறுபட்ட வண்ணம் இருக்கும்.
அந்ததந்த களங்களின் ஊடான பார்வையினை பார்வையாளன் செலுத்தும் பொழுது அது இரசிக்கதக்கதாகிறது.
(அதிகமானோர் மேடை நாடகத்திற்குரிய ஒப்பனையில் உள்ள கலைஞனை புகைப் படத்தில் பார்த்து விமர்சிப்பது ஆரோக்கியமற்றதாக அமைகிறது.)
-தயா லோகதாசன்-