

அழகு..
வாழ்வில் இன்றியமையாத ஒன்று.
கண்ணுக்கு தென்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அழகு.
பார்க்கும் பார்வையை பொறுத்து அதன் படிநிலைகள் அமைக்கப்படுகிறது.
கலைகள் மிக அழகு. - அதற்குள்
ஒப்பனையும் ஓர் அழகு!
ஒப்பனைக் கலை மிகவும் நுண்ணியமானது. இதன் ஒவ்வொரு அசைவும் அவதானமானது. அனுபவங்களின் அடிப்படையில் தான் இதன் கலை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
ஒப்பனைக் களம்
ஒருவருக்குரிய ஒப்பனையை தீர்மானிப்பதில் முக்கிய இடம்பெறுவது அந்தந்த ஒப்பனைக்குரிய களங்களே.
மேடை நாடகங்களுக்குரிய ஒப்பனைகள்
இறுதி இருக்கையில் அமர்ந்திருக்கும் ரசிகனுக்கும் பாத்திர வெளிப்பாடுகளை தெளிவாக காட்டக் கூடியனவாகவே அதிகளவில் அமைந்திருக்கும். இதில் ஒளியமைப்பின் செறிவுக்கேற்பவே ஒப்பனை அமையும்.
திரைப்படங்களுக்குரிய ஒப்பனைகள் பாத்திரத்திற்கேற்ப மாறுபடும். கமரா கண்களுக்கு, மாறுபடும் ஒளியின் செறிவு நிலைகளுக்கிடையில் ஓரே பாத்திரத்தினை வெளிக்காட்டுவதற்காக:- ஒவ்வொரு கணமும் அவ் ஒப்பனையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கும்.
இவ்வாறு நடனங்களுக்கான ஒப்பனைகள், புகைப்படத்துக்குரிய ஒப்பனைகள், வீடியோ கமிராவிற்குரிய ஒப்பனைகள், சாதாரண நிகழ்வுகளுக்குரிய ஒப்பனைகள் என களங்களுக்கு ஏற்ப ஒருவருக்குரிய ஒப்பனைகள் மாறுபட்ட வண்ணம் இருக்கும்.
அந்ததந்த களங்களின் ஊடான பார்வையினை பார்வையாளன் செலுத்தும் பொழுது அது இரசிக்கதக்கதாகிறது.
(அதிகமானோர் மேடை நாடகத்திற்குரிய ஒப்பனையில் உள்ள கலைஞனை புகைப் படத்தில் பார்த்து விமர்சிப்பது ஆரோக்கியமற்றதாக அமைகிறது.)
-தயா லோகதாசன்-